பெஸ்ட் போட்டோ !
ஒரு சோப்பு குமிழி எப்படி உடைகிறது என எப்போதாவது ஆழமாகச் சிந்தித்ததுண்டா என என்னைக் கேள்வி கேட்க வைத்து விட்டன ரிச்சர்ட் ஹீக்ஸ் அவர்களுடைய புகைப்படங்கள்.
ஒரு நீர்க்குமிழி உடைந்து தெறிக்கும் அந்த மைக்ரோ வினாடியை துல்லியமாய் வியப்பூட்டும் விதமாகப் படம் பிடித்துள்ளார் அவர்.
படம் 1 : அப்பாவியாய் காற்றில் மிதக்கிறது குமிழி.
''டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்!
டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்!
நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
எலக்ட்ரிக் தவிர்த்து மாற்று எரிபொருள் கார்களை உருவாக்கும் வகையில், கடந்த 2007ம் ஆண்டு ஐரோப்பிய நிறுவனமான எம்டிஐ நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டன. 2 கட்டமாக புதிய காரை வடிவமைக்க திட்டமிடப்பட்டது.
இதன்படி, காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் கான்செப்ட் மாடல் எஞ்சின் தயாரிக்கப்பட்டு, அந்த எஞ்சின் தற்போது 2 டாடா கார்களில் பொருத்தி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பைசா செலவில்லாமல் செல்லும் இந்த காரை இந்த ஆண்டே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல், டீசல் இல்லாமல் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு அனைத்து கார் நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கு கார் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், காற்றை சக்தியாக கொண்டு இயங்கும் புதிய காரை ஐரோப்பாவை சேர்ந்த எம்டிஐ நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. சமீபத்தில் இந்த காரை வெற்றிகரமாக சோதனை செய்ததாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காரை இந்த ஆண்டே விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் மணிக்குஅதிகபட்சமாக 80 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
மேலும், ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 140 கிமீ வரை இந்த காரில் செல்ல முடியும் என்று தகவல்கள் கூறுகின்றன.
வீடியோ தரத்தை மேம்படுத்த இலவச மென்பொருள்...
உங்கள் கணினி 'டெஸ்க்டாப்'பில் இருத்திக்கொள்ள கூடிய 'புல்பிக்ஸ் ப்ரீ வீடியோ என்கோடிங் மென்பொருள் ' தற்போது உங்கள் 'மௌஸ்' சொடுக்கில் கிடைகிறது.இந்த மென்பொருள் உங்களின் செல்போன் அல்லது இணையத்தள வீடியோ படத்தின் தரத்தை உயர்த்தும்; எந்த சோர்ஸில் இருந்தும் எந்த உபகரனத்துக்கும் வீடியோ படத்தை மாற்றும்.
எம்.பி 3 பிளேயர்,செல்போன் , கணினி, யூ டியூப் என்று எந்த அடிபடையில் இருந்தும், எந்த உபகரணத்தில் இருந்தும் வீடியோ படத்தை தரத்தை உயர்த்தும். பிளாக் எபெக்ட்ஸ், வீடியோ நாய்ஸ், கலர் பேடிங் போன்றவற்றை சீர் செய்து, ரெசல்யூசனை கூட்டும். 3ஜிபி, 3ஜி2, ஏவிஐ, எப்எல்வி, எம்ஒவி, எம்பிஇஜி1, எம்பிஇஜி2, எம்பி4, ஏஎஸ்எப், எம்பி2, எம்பி3, ஏஏசி, உள்ளிட்ட 20௦-க்கும் மேற்பட்ட வீடியோ, ஆடியோ பார்மட்களில் செயல்படும். புதிதாக இந்த வசதியை தேர்வு செய்பவர்கள் 'பிகினர் மோடு'-ஐ தேர்வு செய்து கொள்ளலாம். நுணுக்கமாக மாற்றங்கள் செய்யும் வகையில் தேர்ச்சி பெற்றவர்கள் 'எக்ஸ்பர்ட் மோடு'-ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.
0 comments:
கருத்துரையிடுக