like

“கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு. உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை.” .

Downloads

SlimCleane​r மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணனியின் பங்கானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
இதனடிப்படையில் கணனிகளை தொடர்ச்சியாகப் பாவிக்கும் போது நாளடைவில் தற்காலிக கோப்புக்கள் மற்றும் ஏனைய அநாவசியமான கோப்புக்கள் தங்குவதனால் அவற்றின் செயற்திறன் பாதிக்கப்படுகின்றது.
எனவே இவ்வாறான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்கி மீண்டும் முன்னைய வேகத்துடன் இயங்க வைப்பதற்கு CCleaner போன்ற மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் தற்போது SlimCleaner எனும் புதிய மென்பொருளும் இணைந்துள்ளது.
இம்மென்பொருளானது ஏனைய மென்பொருட்களை விடவும் இலகுவானதும், பயனர் இடைமுகத்தினைக் கொண்டுள்ளதுடன் கணனியிலிருந்து மென்பொருட்களை முழுமையாக அகற்றுதல், வன்றட்டு தொடர்பான விபரங்களை காட்டுதல் மற்றும் Chrome, Firefox, Internet Explorer, Opera உலாவிகளுக்கான நீட்சிகளுடன் அவற்றினை சிறந்த செயற்பாடுடையதாக மாற்றியமைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள உதவுகின்றது.


===========================================================

வன்தட்டில் உள்ள பிழைகளை நீக்குவதற்கு

அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டில் பலவிதமான கோளாறுகள் ஏற்பட்டு, அதனால் பிழை செய்தி காணப்படும்.
விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணணியில் தான் இதுபோன்ற பிழைச் செய்திகள் அதிகமாக காணப்படும்.
வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை கணணியில் இருந்து நீக்கி விடுவோம்.
நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நீங்காமல் சில கோப்புகள் கணணியிலேயே தங்கிவிடும். அந்த கோப்புகளால் கணணியில் அடிக்கடி பிழைச்செய்தி தோன்றலாம். இதுபோன்ற பிழைச் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது.
இதனை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறந்து சோதனை செய்ய வேண்டிய டிரைவை தெரிவு செய்து, Read Only பொத்தானை அழுத்தி சோதனை செய்து கொண்டு பிழை செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.
பிழை செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த பிழை செய்திகளை மீட்டுக் கொள்ள முடியும். பின் கணணியை மறு தொடக்கம்(Restart) செய்துகொள்ள வேண்டும்.
இந்த மென்பொருளானது முற்றிலும் இலவசமாகும். விண்டோஸ் 7க்கு இது மிக சிறந்த மென்பொருளாகும்.
                                                            Download Your Software

========================================================================


AVG அன்டிவைரஸி​ன் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு
இணையத்தள பாவனை, பென்டிரைவ்களின் பாவனை போன்றவற்றின் மூலம் கணனிகள் வைரஸ்கள், மல்வேர்களின் தொற்றுதலுக்கு உள்ளாகுகின்றன.
இதனால் அவற்றின் செயற்பாடு பாதிக்கப்படுவதுடன், தகவல்கள் அழிக்கப்படுதல் மற்றும் திருடப்படுதல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்கு அன்டிவைரஸ்கள் பெரும்பங்காற்றுகின்றன.
இவ்வாறான அன்டிவரைஸ்கள் வெவ்வேறு நிறுவனங்களாலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றுள் சில இலவசமாகக் கிடைக்கின்றன.
அதேபோன்றே அதிகளவில் பிரபல்யமான AVG அன்டிவரைஸ் தனது புதிய பதிப்பான Anti Virus 2013 எனும் பதிப்பினை அனைத்து பயனர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் முற்றிலும் இலவசமாக வெளியிட்டுள்ளது.
இதில் முன்னைய பதிப்புக்களை விட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் 32 bit, 64 bit இயங்குதளங்களுக்கென தனித்தனியாகவும் கிடைக்கின்றது.
AVG Free Antivirus 2013 - 32 bit - Offline Installer - Download Your Software
AVG Free Antivirus 2013 - 64 bit - Offline Installer - Download Your Software



========================================================================


System Information Viewer: கணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு
உங்களது கணனி பற்றிய முழுமையான தகவல்களை System Information Viewer என்ற மென்பொருளின் துணையுடன் அறிந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் உங்கள் கணனி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது.
Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது.
இந்த மென்பொருளை தரவிறக்கி Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணனி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும்.
பல Tab-களில் ஒவ்வொரு பகுதி பற்றியும் விரிவாக காணலாம்.
                                                                  Download Your Software


==================================================


Infix PDF Editor மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
தற்போது கிடைக்கப் பெறும் பலவகையான Word கோப்புக்களில் PDF கோப்புக்கள் பல வகையிலும் பாதுகாப்பு மிகுந்தவையாக காணப்படுகின்றன.
இவ்வாறான கோப்புக்களை உருவாக்குவதற்கு பல்வேறு மென்பொருட்களின் உதவியை நாடவேண்டிய கட்டாயம் காணப்பட்ட போதிலும், தற்போது மைக்ரோசொப்ட்டின் Word Processing மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கோப்புக்களை போன்று Edit செய்யும் வசதியினை Infix PDF Editor மென்பொருள் தருகின்றது.
அதாவது Word மென்பொருளில் காணப்படும் Ulers, Tabs, Search and Replace மற்றும் Spell Checking போன்ற வசதிகளை இம்மென்பொருள் கொண்டிருப்பதனால் ஏனைய மென்பொருட்களின் உதவியை நாடாது நேரடியாக PDF கோப்புக்களை விரும்பியவாறு உருவாக்கிக் கொள்ளள முடியும்.
                                                                 Download Your Software


==================================================


CCleaner இன் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு

கணனியின் வேகத்திற்கு தடையாக காணப்படும் அநாவசியமான கோப்புக்களை நீக்குவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இருந்த போதிலும் CCleaner சில மேலதிக வசதிகளைக் கொண்டிருப்பதுடன் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது CCleanerஆனது பயனர்களின் நன்மை கருதி தனது புதிய பதிப்பான CCleaner v3.23 வெளியிடப்பட்டுள்ளது.
இதனை Windows 8 இயங்குதளத்திலும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதுடன் Google Chrome மற்றும் Firefox உலாவிகளுக்கு சிறந்த ஒத்திசைவையும் கொண்டுள்ளது.
மேலும் இலகுவான பயனர் இடைமுகத்துடன் வெளியிடப்பட்டுள்ள இப்பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
                                                                Download Your Software


0 comments:

கருத்துரையிடுக