like

“கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு. உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை.” .

Science

திறுநீறு எதற்கு?- எளிய விளக்கம்

திருநீறு விளக்கம்

ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது
பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை திருநீறு (விபூதி) குறிக்கின்றது.


வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார்.

திருநீற்றை 4 வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

1) கல்பம்
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு.

2) அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு

3) உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு

4) அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு

"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு.
நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.

புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
------------------------------------------------------------------------------------
1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
8) வலது கையின் நடுவில்
9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு
13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து
17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள்
-------------
திருநீறு அணிவதால்
தடையற்ற இறைச் சிந்தனை,
உயர்ந்த நற்குணங்கள்,
குறைவற்ற செல்வம்,
நல்வாக்கு,
நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும்,
தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும்.


இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றைமங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்தங்கா வினைகளும் சாரும் சிவகதிசிங்கார மான திருவடி சேர்வரே!



கியுரியொசிட்டி(curiosity ) பத்திரமாக செவ்வாயில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கியுரியொசிட்டி அதாவது ஆர்வம்...

அமெரிக்காவின் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிவைப்பதற்காக தயாரித்துள்ள நவீன ரோபோ இயந்திரத்திற்கும் கியுரியொசிட்டி எனும் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வாழும் ஜீவராசிகள் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக கியுரியோசிட்டி இயந்திரம் இன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பாறைகளை ஊடுவருக் கூடிய லேசர் கருவிகள் உள்ளிட்ட அறிவியல் கருவிகள் குறித்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் குறித்த ஆராய்ச்சி இயந்திரம் பூமியில் இருந்து விண்வெளி ஊடான 570 மில்லியன் கிலோமீற்றர் பயணத்தை நிறைவு செய்துள்ளது.




2012 என்ன நடக்கலாம் அறிவியல் ரீதியாக கணித்து சொல்லும் பயனுள்ள தளம்.

2012 -ம் ஆண்டு அறிவியல் ரீதியாக உலகில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும்  ஆர்வம் நம்மில் அனைவருக்கும் இருக்கும்,  பல இடங்களில் குறிப்பாக மாயன் காலண்டர்  கணிப்புபடி 2012 டிசம்பர் 12 -ல் உலகத்திற்கு பாதிப்பு வரலாம் என்ற செய்தியும் வெகுவேகமாக  மக்களிடையை பரவிவருகிறது இதைப்பற்றிய அறிவியல் ரீதியான விளக்கத்தை அளிப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
மாயன் காலண்டர் -ஐ பொருத்தவரை அதில் கூறி உள்ள அனைத்தும் நடந்து  இருக்கிறது, 2012 -ல் உலகம் அழியும் என்பது மாயன் காலண்டரில் உள்ள தகவல் என்று பல பேர் கூறிவருகின்றனர் அதற்கு பின் மாயன் காலண்டரில் எந்த தகவலும் இல்லை. அறிவியல் ரீதியாகவும் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று பல பேர் கூறிக் கொண்டிருக்கும்  நிலையில் உண்மையான தகவல்களை அறிவியல் ரீதியாக சொல்ல ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.2012predictions.net
2012 -ஐ மக்கள் , விஞ்ஞானிகள் ,  எப்படி எல்லாம் கணித்திருக்கின்றனர் என்பதை ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிய வரும் அல்லது தெரிந்த தகவல்களை இத்தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம், பூமியின் வயது என்ன என்பதில் தொடங்கி மாயன் காலண்டர் வரை  அனைத்தையும் விரிவாகவும் அறிவியல் ரீதியாகவும் விளக்குகிறது. மாயன்  காலண்டர் கூறி உள்ளபடி எல்லாம் சித்திரம் மற்றும் சில விநோத கூறியீடுகள் சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாக மாயன் காலண்ட்ரில் இப்படி தான் இருக்கிறது என்று யாரும் துல்லியமாக கூறியதில்லை, ஆனால் ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன் அதை மாயன் காலண்டருடன் ஓப்பிடு செய்து ஏற்கனவே இது மாயனில் சொல்லி இருக்கிறது  என்பதை தெரிவிக்கின்றனர். சில நிகழ்ச்சிகள் மாயன் காலண்டரில் உள்ளதை பார்க்கும் போது உண்மையான நிகழ்ச்சி தான் என்பதை மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரமும்  உள்ளது. இதைத்தவிர வானவியல் சம்பந்தமான பிரச்சினைகள் 2012 -ல் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம்  விளக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக 2012 -ல் என்னவெல்லாம் நடக்கலாம் என்று  கணிப்பவர்களுக்கு இந்தத்தளம் பதிலாக இருக்கும்.


0 comments:

கருத்துரையிடுக